ரஷ்யாவை ஆட்டிப்படைக்கும் கொரோனா! – ஒரே நாளில் 40 ஆயிரம் பேர் பாதிப்பு!
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் சமீப காலமாக குறைந்திருந்த நிலையில் ரஷ்யாவில் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
உலகம் முழுவதும் கடந்த இரண்டு வருட காலமாக கொரோனா பரவி வரும் நிலையில் பல கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பலர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் பல நாடுகளும் கொரொனா தடுப்பூசி செலுத்துவதில் தீவிரம் காட்டி வருகிறது.
இந்நிலையில் ரஷ்யாவில் கடந்த சில நாட்களாக கொரோனா அதிகரித்து வருகிறது தினசரி பாதிப்பு 40 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 83,92,697 ஆக உயர்ந்துள்ளது. தற்போது சீனாவிலும் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் ரஷ்யாவிலும் அதிகரித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.