வெள்ளி, 21 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 20 பிப்ரவரி 2025 (09:47 IST)

கொசுவை உயிருடனோ, பிணமாகவோ கொண்டு வந்தால் சன்மானம்! - பிலிப்பைன்ஸ் அரசு அறிவிப்பு!

பிலிப்பைன்ஸில் கொசுக்களை உயிருடனோ, கொன்றோ கொண்டு வந்து தந்தால் பண சன்மானம் அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகரான மணிலாவில் டெங்கு காய்ச்சல் மிக வேகமாக பரவி வருகிறது. இந்த ஆண்டில் மட்டும் பிலிப்பைன்ஸில் 28 ஆயிரத்திற்கும் அதிகமானோர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் நாட்டில் டெங்கு பாதிப்பை குறைக்கும் நடவடிக்கையில் அந்நாட்டு அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

 

டெங்கு வரவழைக்கும் கொசுக்கள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும், டெங்கு கொசுக்களை ஒழிக்கவும் பிலிப்பைன்ஸ் அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, பொதுமக்கள் கொசுவை உயிருடனோ, கொன்றோ கொண்டு வந்து கொடுத்தால் 5 கொசுக்களுக்கு ரூ.1.50 வீதம் எத்தனை கொசுக்களோ அத்தனைக்கும் சன்மானம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இதனால் கொசு பிடிப்பதையே சிலர் முழு நேர வேலையாக கொண்டு கொசுக்களை பிடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் சில இடங்களில் மக்கள் பணத்திற்காக தண்ணீரை தேங்க வைத்து கொசுக்களை வளர்த்து விடும் அபாயமும் உள்ளதாக சிலர் எச்சரித்து வருகின்றனர்.

 

Edit by Prasanth.K