1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified திங்கள், 20 மார்ச் 2023 (22:18 IST)

காலிஸ்தான் தலைவரை விடுவிக்கக்கோரி இந்திய தூரகத்தின் மீது தாக்குதல்

khalistan
அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில்  உள்ள இந்திய தூதரகம் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில், ஆஸ்திரேலியா மற்றும் கனடா ஆகிய நாடுகளிலுள்ள இந்துக் கோவில்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டும், இந்தியாவுக்கு எதிரான வாகசங்களையும் எழுதினர்.

சில இடங்களில் காலிஸ்தான் ஆதரவாளர்ககள் இந்தத் தாக்குதல் ஈடுபட்டதாகவும் தகவல் வெளியானது.

இந்த நிலையில், அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில்  உள்ள இந்தியத் தூதரகம் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் ஈடுபட்டுள்ளனர். அத்துடன்  இந்தியத் தூதரகத்திலுள்ள இந்திய தேசிய கொடியை கீழே இறக்கி அவமதிப்பு செய்துள்ளனர்.

எனவே காலிஸ்தான் தலைவர் அம்ரிபாத் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் அம்ரித்பால் சிங்கை விடுதலை செய்ய வேண்டுமெனக் கோரி தூதரகக் கட்டிடச் சுவறிலும் எழுதிவைத்துள்ளளனர்.