திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 14 ஜூலை 2020 (06:59 IST)

ராமர் இந்திய கடவுள் அல்ல, அவர் ஒரு நேபாளி: நேபாள பிரதமரின் சர்ச்சை கருத்து

ராமர் இந்திய கடவுள் அல்ல, அவர் ஒரு நேபாளி:
ராமர் ஒரு நேபாளி என்றும், அவர் இந்தியர் அல்ல எனவும் நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி சர்ச்சை கருத்து ஒன்று தெரிவித்துள்ளதாக நேபாள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
இந்தியா மற்றும் நேபாளம் இடையே சமீபகாலங்களில் உறவில் சிக்கல்கள் உருவாகி வரும் நிலையில் நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி பதவி விலக வேண்டுமென்று அவரது சொந்த கட்சியினர்களே வலியுறுத்தி வருகின்றனர். குறிப்பாக இந்திய பகுதிகளை உள்ளடக்கி நேபாளத்தின் புதிய வரைபடம் ஒன்றை வெளியிட்டதற்கு அந்நாட்டு பாராளுமன்றத்தில் ஒப்புதலும் பெறப்பட்டது இருநாட்டு உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது
 
இந்த நிலையில் கடவுள் ராமர் ஒரு நேபாளி என்றும், அவர் இந்தியர் அல்ல என்றும், உண்மையான அயோத்தி நேபாளத்தில் தான் உள்ளது என்றும் நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி கூறியுள்ளதாக நேபாள ஊடகங்களில் நேற்றிரவு செய்திகள் வெளியானது. இதற்கு இந்திய தரப்பில் என்ன பதிலடி கொடுக்கப்படும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்