1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 3 செப்டம்பர் 2022 (09:11 IST)

இலங்கை திரும்பிய கோத்தபய; பங்களாவுக்கு பலத்த பாதுகாப்பு!

Kotapaya
இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே மீண்டும் நாடு திரும்பியுள்ள நிலையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இலங்கையில் கடந்த சில மாதங்கள் முன்னதாக பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதால் மக்கள் உணவுப் பொருட்களுக்கே திண்டாடும் நிலை ஏற்பட்டது. இதனால் மக்கள் போராட்டம் வெடித்த நிலையில் அரசியல்வாதிகள் பலரின் வீட்டை தீக்கிரையாக்கினர்.

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் அதிபர் மாளிகையும் தாக்கப்பட்ட நிலையில் அவர் இலங்கையிலிருந்து தப்பி மாலத்தீவு, சிங்கப்பூர் சென்று அங்கிருந்து தாய்லாந்தில் அடைக்கலமானார்.

பின்னர் இலங்கையில் அதிபராக ரணில் விக்ரமசிங்கெ பொறுப்பேற்றுக் கொண்டார். இலங்கையில் நிலைமை கட்டுப்பாட்டிற்கு வந்துள்ள நிலையில் கோத்தபய ராஜபக்சே மீண்டும் இலங்கை சென்றடைந்துள்ளார்.

பண்டாரநாயக்கே விமான நிலையத்தில் வந்திறங்கிய ராஜபக்சே கொழும்பு விஜிர்மா மாவதா பங்களாவில் தங்கியுள்ளார். அங்கு அவருக்கு உச்சப்பட்ச பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.