திங்கள், 25 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 9 செப்டம்பர் 2022 (13:31 IST)

ராணி எலிசபெத் சொத்து மதிப்பு எவ்வளவு? அரியணை ஏறும் சார்லஸுக்கு சொத்து கிடைக்குமா?

ராணி எலிசபெத் சொத்து மதிப்பு குறித்த விவரங்கள், அவரிடம் இருக்கும் விலைமதிப்புள்ள பொருட்கள் குறித்த விவரமும் வைரலாகி வருகின்றன.


இங்கிலாந்தின் மகாராணியாக கடந்த 70 ஆண்டு காலமாக ஆட்சி செய்து வந்தவர் இரண்டாம் எலிசபெத். 96 வயதான ராணி எலிசபெத் தற்போது உடல்நிலை குறைவால் உயிரிழந்துள்ளார். உலகிலேயே அதிக காலம் அரியணையில் வீற்றிருந்த மகாராணி என்று ராணி எலிசபெத் சாதனை படைத்துள்ளார். நேற்று மாலை 4.30 மணியளவில் மகாராணி இரண்டாம் எலிசபெத் உயிரிழந்துள்ளார்.

ராணி எலிசபெத் மறைவிற்கு உலகம் முழுவதும் உள்ள தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இதனைத்தொடர்ந்து ராணி எலிசபெத் சொத்து மதிப்பு குறித்த விவரங்கள், அவரிடம் இருக்கும் விலைமதிப்புள்ள பொருட்கள் குறித்த விவரமும் வைரலாகி வருகின்றன. அவற்றின் தொகுப்பு இதோ…

ராணி எலிசபெத் சொத்து மதிப்பு:

70 ஆண்டுகள் ஆளுகை செய்த எலிசபெத்தின் சொத்து மதிப்பு 500 மில்லியன் டாலருக்கும் மேல் என கூறப்படுகிறது.  ராணி எலிசபெத்துக்கு தனிப்பட்ட முறையில் விலையுயர்ந்த ஓவிய படைப்புகள், நகைகள், ரியல் எஸ்டேட் சொத்துகள், பல முதலீடுகள் உள்ளன.

ரவுன் எஸ்ட்டேட் - 19.5 பில்லியன் டாலர்
பக்கிம்ஹாங் அரண்மனை - 4.9 பில்லியன் டாலர்
தி டச்சி ஆஃப் கார்ன்வால் - 1.3 பில்லியன் டாலர்
தி டச்சி ஆஃப் லாங்காஸ்டர் - 748 மில்லியன் டாலர்
கென்சிங்டன் அரண்மனி - 630 மில்லியன் டலார்
ஸ்ஜ்காட்லாந்தின் கிரவுன் எஸ்டேட் - 592 மில்லியன் டாலர்


விலைமதிப்புள்ள பொருட்கள்:
  • பிரிட்டன் அரசு குடும்பம் சுமார் 60 லட்சம் ஏக்கர் நிலத்தை வைத்துள்ளது. இதன் மதிப்பு 33 டிரில்லியன் டாலராக இருக்கலாம்.
  • அரசு குடும்பத்திடம் தற்போது சுமார் 10 லட்சம் ஓவியங்கள், வாட்டர்கலர்கள், வரைபடங்கள் உள்ளன,
  • யுனைடெட் கிங்டமின் நீர் எல்லைகளுக்குள் உள்ள அனைத்து திறந்த நீர் மீன்வளத்தையும் ராணி சொந்தமாக வைத்திருக்கிறார்.
  • இங்கிலாந்தின் அரியணையில் அமர்ந்திருப்பவர் 5300 ஜோடி அன்ன பறவைகளுக்குச் சொந்தமானவர். ஒரு அன்ன பறவை முட்டை 300 டாலர்.
  • எலிசபெத்-யிடம் பல மில்லியன் டாலர் மதிப்பிலான நகைகள் உள்ளது எனவும் கூறப்படுகிறது.
இளவரசர் சார்லஸுக்கு சொத்து கிடைக்குமா?

தற்போது ராணி மரணித்த நிலையில் இந்த பெரும்பாலான சொத்துகள் இளவரசர் சார்லஸ் அரியணை ஏறும் போது அவருக்கு கொடுக்கப்படும் என கூறப்படுகிறது. இந்த சொத்துகளுக்கு இங்கிலாந்து சட்டத்தின் படி வரி விலக்கும் அளிக்கப்படலாம் எனவும் தெரிகிறது.

ஆனால், கிரவுன் எஸ்டேட், பக்கிங்ஹாம் அரண்மனை, ஸ்காட்லாந்தின் கிரவுன் எஸ்டேட், டச்சி ஆஃப் கார்ன்வால், டச்சி ஆஃப் லான்காஸ்டர் மற்றும் கென்சிங்டன் அரண்மனை ஆகியவற்றை உள்ளடக்கிய 28 பில்லியன் டாலர் பேரரசுக்கு சார்லஸ் நேரடியாக வாரிசாக மாட்டார், ஆனால் ராணி எலிசபெத் II இன் தனிப்பட்ட சொத்துக்கள் மட்டுமே அவருக்காக நியமிக்கப்பட்டது என கூறப்படுகிறது.