வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 24 செப்டம்பர் 2022 (21:39 IST)

3 லட்சம் பேர் ராணுவத்திற்கு தேவை- அண்டை நாடுகளுக்கு குடிபெயரும் ரஷ்ய ஆண்கள்

உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் போர்  நடத்தி வரும் நிலையில  தற்போது ரஷியாவில் இருந்து ஆண்கள் அண்டை நாடுகளுக்கு குடிபெயர்ந்து வருகின்றனர்.

உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் தொடர்ந்து 6 மாதங்களுக்கு மேலாகப் போர் நடத்தி வருகிறது. இந்தப் போரில் இரு தரப்பிலும் பல ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களும், சிறுவர்களும், ராணுவ வீரர்கள் பலியாகியுள்ளனர்.

இந்த நிலையில், உக்ரைன் மீதான தாக்குதலை தீவிரப்படுத்த ரஷியாவில் உள்ள விமான நிலைய ஊழியர்களையும்,   ஓய்வு பெற்ற ராணுவத்தினரையும்  ராணுவத்தில் சேர்க்க புதின் அறிவிப்பு விடுத்துள்ளார். இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.

10க்கும் மேற்பட்ட விமான  நிலையங்களில் இருந்து 50-80%  ஊழியர்கள் ராணுவத்தின் சேரக் கட்டாயப்படுத்த வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் உக்ரைன் மீதான தாக்குதலை தீவிரப்படுத்த திட்டமிட்டுள்ள ரஷிய அதிபர் புதின்  மேலும், 3 லட்ச வீரர்களை ராணுவத்தின் சேர்க்கவுள்ளதாக அறிவித்தார்.

எனவே, ரஷியாவில் ராணுவத்தின் ஈடுபட விரும்பாத ஆண்கள் அண்டை நாடான ஜார்ஷியாவுக்குச்  செல்லத் தொடங்கவுள்ளனர்.

ரஷியாவில் இருந்து ஜார்ஜியாவுக்கு செல்ல விசா தேவையில்லை என்பதால், ஆண்கள் பலரும் தங்களில் கார்களில் பயணித்து வருகின்றனர்.