லண்டனில் இந்திய தேசிய கொடி கிழிப்பு: மோடியை எதிர்த்து போராட்டம்!
லண்டனில் காமன்வெல்த் மாநாடு நடந்து வருகிறது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி லண்டன் சென்றுள்ளார். அங்கு இந்திய வம்சாவளி மக்களுடன் பேசினார்.
ஆனால், மோடிக்கு லண்டனிலும் எதிர்ப்புகள் உள்ளது. அவர் செல்லும் வழியில் திரண்ட இங்கிலாந்து வாழ் இந்தியர்கள் மோடிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
காஷ்மீர், உத்தரபிரதேச கற்பழிப்பு சம்பவங்கள் மற்றும் இந்தியாவில் சமீபத்தில் நடந்த வன்முறைகளை கண்டித்து இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். மோடிக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திக்கொண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அப்போது அங்கு ஏற்றப்பட்டு இருந்த இந்திய தேசியக்கொடியை, கொடிக்கம்பத்தில் இருந்து இறக்கி அதை கிழித்தனர். இதனால் அங்கு மோதலும், வன்முறையும் ஏற்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.