செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 29 மார்ச் 2018 (12:16 IST)

மூன்றாவது திருமணம் செய்து கொண்ட விஜய் மல்லையா?

இந்திய வங்கிகளில் பல கோடி ரூபாய் கடன் வாங்கி விட்டு இங்கிலாந்து நாட்டிற்கு தப்பி சென்ற பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா புதிதாக திருமணம் செய்து கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

 
இந்திய வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கடன் வாங்கிய விஜய் மல்லையா அதை திருப்பி செலுத்தாமல் இங்கிலாந்துக்கு தப்பி சென்றுள்ளார்.  அவரை இந்தியாவிற்கு நாடு கடத்த சிபிஐ தரப்பில் இங்கிலாந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மேலும், ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பிலான அவரது சொத்துக்கள் முடக்கி வைக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில், தனது பெண் தோழி பிங்கி லால்வானியை அவர் திருமணம் செய்து கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 62 வயதான விஜய் மல்லையா இதுவரை 2 திருமணம் செய்திருக்கிறார். எனவே இது அவருக்கு 3வது திருமணம் ஆகும். பிங்கி லால்வானி கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் விமான பணிப்பெண்ணாக பணிபுரிந்தவர். அவர்களுக்குள் திருமணம் முடிந்துவிட்டதாக பலர் கூறி வருகிறார்கள்.
 
அதை நிரூபிக்கும் வகையில் பொது இடங்களில் அவர்கள் இருவரும் ஜோடியாகவே வலம் வரும் புகைப்படங்களும் வெளியாகியுள்ளது.