வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 17 அக்டோபர் 2024 (09:46 IST)

மூன்றாவது மாடியிலிருந்து விழுந்து ‘பாப்’ பாடகர் மரணம்! தற்கொலையா?

Liam Payne

பிரபல பாப் இசைக்குழுவை சேர்ந்த லியாம் பெய்ன் மூன்றாவது மாடியிலி இருந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 

 

உலக அளவில் பிரபலமாக உள்ள ஆங்கில இசைக்குழுக்களில் ஒன்றாக இருந்தது One Direction. இந்த குழுவில் பாப் பாடகராக இருந்தவர் லியாம் பெய்ன். பின்னர் குழுவில் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக ஒன் டைரக்‌ஷன் குழு பிரிந்த நிலையில் லியாம் பெய்ன் அதிலிருந்து விலகினார்.

 

அர்ஜெண்டினாவில் பலெர்மோவில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் வசித்து வந்த லியாம் பெய்ன் திடீரென மூன்றாவது மாடியிலிருந்து விழுந்ததில் சம்பவ இடத்திலேயே பலியானார். முன்னதாக அதீத போதை பழக்கம் மற்றும் தற்கொலை எண்ணங்களால் தவித்து வந்த லியாம் பெய்ன் இந்த பிரச்சினைகளுக்காக சிகிச்சை எடுத்து வந்தார்.

 

இந்நிலையில் மூன்றாவது மாடியிலிருந்து அவர் விழுந்து இறந்த சம்பவம் எதிர்பாராத விபத்தா அல்லது தற்கொலை முடிவா என்ற கேள்விகளும் எழுந்துள்ளது.

 

Edit by Prasanth.K