வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 15 ஜூலை 2024 (12:35 IST)

Copa America 2024: வெற்றிவாகை சூடிய மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணி!

Copa America

கால்பந்து போட்டிகளில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த Copa America 2024 போட்டியில் அர்ஜெண்டினா அணி வெற்றி பெற்று கோப்பையை வென்றுள்ளது.

கால்பந்து ரசிகர்களிடையே பிரபலமான கால்பந்து போட்டிகளில் கோப்பா அமெரிக்காவும் ஒன்று. லத்தீன் அமெரிக்க நாடுகள் போட்டியிடும் இந்த போட்டிகள் தொடங்கி பெரும் பரபரப்போடு நடந்து வந்த நிலையில் அரையிறுதி போட்டியில் நடப்பு ஃபிஃபா சாம்பியன் ஆன அர்ஜெண்டினா அணியும், கொலம்பியா அணியும் இறுதி போட்டிக்கு முன்னேறின.

இன்று நடந்த இறுதி போட்டியில் இரு அணிகளும் மோதிக் கொண்ட நிலையில் முதல் பாதியில் இரு அணிகளுமே முயன்று ஒரு கோல் கூட அடிக்கவில்லை. இரண்டாம் பாதியிலும் ஆட்டம் இறுதியை நெருங்கும் வரை கோல்களே விழாமல் சென்றதால் பரபரப்பு எழுந்தது. சரியாக ஆட்டத்தின் 112வது நிமிடத்தில் அர்ஜெண்டினா வீரர் லட்டாரோ மார்ட்டினெஸ் முதல் கோலை அடித்தார்.

அதன்பின்னர் கொலம்பியா அடிக்க முயன்ற கோல்கள் தோல்வியில் முடிந்ததால் ஆட்ட முடிவில் 1-0 என்ற கணக்கில் த்ரில் வெற்றி பெற்றது அர்ஜெண்டினா அணி. கடந்த ஃபிஃபா உலகக்கோப்பையில் சாம்பியன்ஷிப் வென்ற அர்ஜெண்டினா தற்போது கோப்பா அமெரிக்காவையும் வென்றுள்ளது அர்ஜெண்டினா கால்பந்து ரசிகர்களையும், லியோனல் மெஸ்சி ரசிகர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Edit by Prasanth.K