6 வயது சிறுமியை கைது செய்த போலீஸார் ! வைரலாகும் வீடியோ

america
sinoj kiyan| Last Updated: வெள்ளி, 28 பிப்ரவரி 2020 (21:06 IST)
6 வயது சிறுமியை கைது செய்த போலீஸார் ! வைரலாகும் வீடியோ

அமெரிக்காவின் ஃப்ளொரிடா மாகாணத்தில் 6 வயது சிறுமியை போலீஸார் கைது செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து வீடியோ சமூகவலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள ஆர்லாண்டோ பகுதியில் வசித்து வரும்
6 வயது சிறுமி, தான் படிக்கும் பள்ளியில் ஆசிரியர்களிடம் கடுமையாக நடந்துகொண்டதாக கைது செய்யப்பட்டுள்ளார்.


போலீஸ் அதிகாரி ஒருவர் சிறுமியின் கைகளை கட்டி, அவரை அழைத்துச் செல்லும்போது, சிறுமி, எனக்கு போலீஸ் வாகனத்தில் செல்ல விருப்பமில்லை என கூறி அழுகின்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
போலீஸ் அதிகாரியின் செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.இதில் மேலும் படிக்கவும் :