திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : வெள்ளி, 20 அக்டோபர் 2017 (15:38 IST)

செலீன் போட்டோ உண்மையா? சந்திரனில் குகை உள்ளதா? ஜப்பான் விஞ்ஞானிகள் பதில்!!

ஜப்பானின் விண்கலமான செலீன் சந்திரனில் குகை இருப்பதை போட்டோ எடுத்து அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


 
 
சந்திரனுக்கு முதன் முதலாக அமெரிக்கா மனிதர்களை அனுப்பி சாதனை படைத்தது. அதன்
பின்னர் இந்தியா, சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள் சந்திரனில் ஆய்வு மேற்கொண்டன.

 
இந்நிலையில், ஜப்பானின் செலீன் விண்கலம் சந்திரனில் ஆய்வு நடத்தி வருகிறது. தற்போது செலீன் சந்திரனில் மிகப்பெரிய குகை இருப்பது போன்ற புகைப்படத்தை எடுத்து அனுப்பியுள்ளது.  
 
இந்த குகை 50கிமீ 131 மைல் நீளமும், 100 மீட்டர் அகலமும் கொண்டது என கணக்கிடப்பட்டுள்ளது. இந்த குகை 350 கோடி ஆண்டுகளுக்கு முன்பு உருவாகி இருக்கலாம் என கருதுகின்றனர்.
 
இது சந்திரனில் உள்ள மாரியஸ் என்ற எரிமலையில் உள்ளது. இந்த எரிமலை வெடித்ததில் வெளியேறி ஓடிய எரிமலை குழம்பு சென்ற வழி மிகப்பெரிய குகையாக மாறியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.