1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Updated : செவ்வாய், 3 அக்டோபர் 2017 (11:16 IST)

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்த சினேகன் தோல்வி குறித்து வெளியிட்ட வீடியோ

பிக்பாஸ் நிகழ்ச்சி 100 நாட்கள் நடந்து முடிந்துவிட்டது. அதில் முதல் பரிசை ஆரவ் தட்டி சென்றார். ரசிகர்கள் பலரும்  சினேகன்தான் வெற்றி பெறுவார் என்று கூறி வந்த நிலையில் ஆரவ் வெற்றி பெற்றதாக அறிவித்தார் கமல்.

 
இந்நிலையில் சினேகன் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்தவுடன் ஒரு சில கருத்துக்களை வீடியோ மூலம் மக்களுடன் பகிர்ந்துள்ளார். இதில் ‘எனக்கு ஆதரவு தந்த அனைத்து மக்களுக்கும் நன்றி, நீங்கள் இத்தனை நாட்கள் ஆதரவு தராமல்  பிக்பாஸ் வீட்டில் என்னால் 100 நாட்கள் இருந்திருக்க முடியாது. ஒருவித அச்ச உணர்வுடன்தான் வெளியே வந்தேன், ஆனால்,  எனக்காக ரசிகர்களில் சிலர் டிவியை எல்லாம் உடைத்திருக்கிறார். ஒரு இடத்தில் பஸ் மறியல் கூட நடந்ததாம்.  இதையெல்லாம் கேட்கும்போது என்ன சொல்வது என்றே தெரியவில்லை என்று நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
 
தமிழகத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சி மக்கள் மத்தியில் அதிர்வலையை ஏற்படுத்தியது இதுவே முதல்முறை என்பது  குறிப்பிடத்தக்கது.