1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 31 அக்டோபர் 2022 (08:58 IST)

மொத்தமாக வாரி சுருட்டிய நால்கே; 100க்கும் மேல் பலி? – சோகத்தில் பிலிப்பைன்ஸ்!

Nalgae Storm
பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு மாகாணங்களை நால்கே புயல் தாக்கிய நிலையில் ஏராளமான உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான பிலிப்பன்ஸை நால்கே என்ற புயல் தாக்கியுள்ளது. பிலிப்பைன்ஸின் தெற்கு மாகாணங்களான மகுயிண்டனாவ் உள்ளிட்ட பகுதிகளை இந்த புயல் தாக்கி கடுமையான சேதத்தை விளைவித்துள்ளது.

புயல் தாக்கியதால் மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளது. பல கட்டிடங்களில் மேற்கூரைகள் பெயர்ந்து பறந்துள்ளன. மின்கம்பங்கள் சாய்ந்துள்ளன. புயலை தொடர்ந்து பெய்த கனமழையால் மாகாணம் முழுவதும் பெரும் வெள்ளக்காடாக மாறியுள்ளது. பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த கடும் புயலால் இதுவரை 80க்கும் மேற்பட்டோர் இறந்துள்ள நிலையில் 30க்கும் மேற்பட்டவர்களை காணவில்லை என கூறப்படுகிறது. புயல் பாதித்த பகுதிகளை அந்நாட்டு மீட்பு குழுவினர் மற்றும் ராணுவம் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த கடும் புயல் பிலிப்பைன்ஸை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Edited By Prasanth.K