செவ்வாய், 21 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 16 ஜனவரி 2021 (15:38 IST)

வயதானோருக்கு தடுப்பூசி போடக்கூடாதா? நார்வே சம்பவம் கூறுவது என்ன?

நார்வேயில் இந்த தடுப்பூசி போட்டதில் 23 பேர் உயிரிழந்ததுள்ளனர். 

 
உருமாறிய கொரோனா வைரஸின் ஆதிக்கம் தற்போது குறிப்பிட்ட சில நாடுகளில் அதிகரித்து வருவதாலும் முந்தைய கொரோனாவின் தாக்கமும் அப்படியே இருப்பதாலும் கொரோனா தடுப்பூசியை உலகம் முழுவதும் பல நாடுகள் நடைமுறைக்கு கொண்டுவந்துள்ளது.  
 
அமெரிக்காவை சேர்ந்த பைசர் மற்றும் ஜெர்மனியின் பயோன்டெக் நிறுவனங்கள் இணைந்து தயாரித்த கொரோனா தடுப்பூசியை பல நாடுகள் பயன்படுத்தி வருகின்றன. அந்த வகையில் நெதர்லாந்தில் 47,000 சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. 
 
இதில் 100 பேருக்கு பக்க விளைவுகள் ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல நாடுகள் பைசர் தடுப்பூசியால் பக்க விளைவுகள் ஏற்படுவதாக தெரிவித்துள்ளது. அதிலும் குறிப்பாக நார்வேயில் இந்த தடுப்பூசி போட்டதில் 23 பேர் உயிரிழந்ததுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்நிலையில், பைசர் தடுப்பூசி போட்டு இறந்த அனைவருமே 80 வயதுக்கு மேற்பட்டவர்கள். இவர்கள், நார்வேயில் உள்ள நர்சிங் ஹோம்களில் வாழ்ந்த முதியவர்கள். இவர்கள் பைசர் தடுப்பூசியைப் பயன்படுத்தியபின் காய்ச்சல் போன்ற சில சிரமங்களை சந்தித்தபின் இறந்தனர் என நார்வே  நாட்டின் மருத்துவ நிறுவன இயக்குனர் தெரிவித்துள்ளார்.