1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : சனி, 6 ஜனவரி 2018 (19:55 IST)

டிரம்ப் குறித்த சர்ச்சை புத்தகத்தை வாங்க நீண்ட க்யூ....

உலகின் அதிக சக்தி வாய்ந்த அமெரிக்க ஜனாதிபதி பதவியில் இருப்பவர் டொனால்ட் டிரம்ப். இவர் எப்போது சர்ச்சைகளுக்கு பெயர் போனவர். இந்நிலையில், அமெரிக்காவின் பிரபல பத்திரிக்கையாளர் மைக்கெல் உல்ப் என்பவர் ஒரு புத்தகத்தை எழுதியுள்ளார். 
 
பயர் அண்ட் புரி: இன்சைட் தி டிரம்ப்ஸ் வொயிட் ஹவுஸ் என்ற அந்த புத்தகத்தில் டிரம்ப் தனது நண்பர்களின் மனைவிகளுடன் பாலியல் உறவு வைத்துக்கொள்ள அதிகம் விரும்புவார். தன்னுடைய நண்பர்களை பல வழிகளில் ஏமாற்றுவார் என குறிப்பிடப்பட்டிருந்தது. 
 
மேலும், டிரம்ப் குறித்த பல சர்ச்சைக்குரிய செய்திகள் அதில் இடம்பெற்றுள்ளது. டிரம்ப் தன் மீது வைக்கப்பட்டிருந்த சில கருத்துகல் பொய்யானது என மறுப்பு தெரிவித்தாலும், இந்த புத்தகத்தை வாங்க கடைகளில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.