செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 6 ஜனவரி 2018 (11:03 IST)

விமானத்தில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை: அமெரிக்காவில் இந்தியர் கைது

அமெரிக்காவில் இந்தியாவைச் சேர்ந்த நபர் விமானத்தில் தன்னுடன் பயணித்த இளம்பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் கைது செய்யப்பட்டார்.
இந்தியாவை சேர்ந்த பிரபு ராமமூர்த்தி என்பவர் அமெரிக்காவில் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். ராமமூர்த்தி அங்குள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். ராமமூர்த்தி லாஸ்வேகாசிலிருந்து டெட்ராய்டுக்கு விமானத்தில் பயணித்தபோது தன்னுடன் பயணித்த 22 வயது இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அந்த பெண் விமான ஊழியர்களிடம் புகார் செய்தார்.
 
இதையடுத்து ராமமூர்த்தி மீது பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். அவரை போலீசார் மிச்சிகன் மாகாணத்தில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளார். ராமமூர்த்தி தன்மீதான புகாரை மறுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில் நான் மாத்திரை எடுத்துக் கொண்டு தூங்கிவிட்டேன் அதனால் என்ன நடந்தது என தெரியவில்லை என தெரிவித்துள்ளார். அவரிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.