1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 17 டிசம்பர் 2021 (19:58 IST)

உலகளவில் அதிகரிக்கும் ஒமிக்ரான் தொற்று…

தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளுக்கு பரவி வரும் ஒமிக்ரான் தொற்று வேகமாகப் பரவி வருகிறது.

இங்கிலாந்தில் ஒரேநாளில் சுமார் 78 ஆயிரம் பேர் இத்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதேபோல் இந்தியாவில் மொத்தம் 101 பேர் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

மேலும், தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று செய்தியாளர்கள் சந்திப்பிபோது, சென்னையில் 13 பேர் ஒமிக்ரான் அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.