1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 1 நவம்பர் 2020 (11:01 IST)

திடீர் ஊரடங்கு, சிதறிய மக்கள், 700 கி.மீ ட்ராபிக்! – ஸ்தம்பித்தது பாரிஸ்!

உலகம் முழுவதும் பல நாடுகளில் கொரோனா இரண்டாவது அலை வீச தொடங்கியுள்ள நிலையில் பிரான்ஸில் திடீர் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதலாக கொரோனா பரவியது. இதனால் கடந்த மார்ச் மாதம் முதலாக கிட்டத்தட்ட அனைத்து நாடுகளிலும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து பல மாதங்களாக ஊரடங்கு அமலில் இருந்த நிலையில் கொரோனா பாதிப்பு குறை தொடங்கியதால் மெல்ல இயல்பு நிலை திரும்பி வந்தது.

இந்நிலையில் தற்போது ஐரோப்பிய நாடுகளில் கொரோனா இரண்டால் அலை பரவ தொடங்கியுள்ளது. பிரான்ஸ் தலைநகரான பாரிஸில் கொரோனா பாதிப்பு மீண்டும் வேகமாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் பாரிஸில் அவசர பிரகடனமாக நேற்று முன்தினம் இரவு முதலாக திடீர் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இரவு 12 மணி முதல் ஊரடங்கு அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்ட நிலையில் மாலை முதலாக பாரிஸிலிருந்து மக்கள் வெளியேற தொடங்கினர்.

இதனால் பாரிஸ் முழுவதும் போக்குவரத்து அதிகரித்ததால் சாலைகளில் வாகனங்கள் எக்கச்சக்கமாக செல்ல தொடங்கின. இதனால் பெரிய அளவில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பாரிஸில் சாலைகளிலிருந்து சுமார் 700 கி.மீ தூரம் வரையிலும் போக்குவரத்து முழுவதுமாக ஸ்தம்பித்து போனதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த வீடியோக்கள் இணையத்திலும் பரவி வைரலாகி வருகிறது.