செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 1 நவம்பர் 2020 (07:16 IST)

உலக நாடுகளில் அதிகரிக்கும் கொரோனா: மீண்டும் லாக்டவுன்

உலக நாடுகளில் அதிகரிக்கும் கொரோனா: மீண்டும் லாக்டவுன்
கடந்த 6 மாதங்களுக்கு மேலாக இந்தியா உள்பட உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில் கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் ஓரளவு கட்டுப்படுத்த பட்டு வருகிறது 
 
இந்த நிலையில் தற்போது இங்கிலாந்து போர்ச்சுக்கல் நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்ததன் காரணமாக மீண்டும் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
இங்கிலாந்து நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் கொரோனா மரணங்களும் அதிகரித்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இதனையடுத்து இங்கிலாந்து நாட்டில் நான்கு வாரத்திற்கு கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதாக அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் அவர்கள் திடீரென அறிவித்துள்ளார் 
 
இதன் காரணமாக அத்தியாவசிய தேவை இல்லாத வர்த்தக நிறுவனங்கள் மூடப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் தேவையில்லாமல் பொதுமக்கள் வெளியே நடமாட வேண்டாம் என்றும் அவர் மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார். பப்ஸ் மதுபானக் கூடங்கள் உணவகங்கள் அனைத்தும் மூடப்பட்டு இருக்கும் என்றும் கட்டுமான பணிகள் உற்பத்தி நிறுவனங்கள் மட்டும் தொடர்ந்து இயங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
இதேபோல் இங்கிலாந்து நாட்டை அடுத்து போர்ச்சுக்கல் நாட்டிலும் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டிலிருந்த நாடுகள் மீண்டும் கொரோனா வைரஸ் அதிகரித்ததன் காரணமாக லாக்டவுன் அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது