1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 27 மே 2024 (17:22 IST)

பப்புவா நியூ கினியாவில் பயங்கர நிலச்சரிவு.. உயிருடன் புதைந்த 2 ஆயிரம் பேர்...!

பப்புவா நியூ கினியா நாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் 2000 பேர் உயிருடன் புதைந்ததாக வெளிவந்திருக்கும் செய்தி உலக நாடுகளை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது.
 
ஆஸ்திரேலியா நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள பப்புவா நியூ கினியா என்ற நாட்டில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவதுண்டு. இந்த நிலையில் நேற்று அதிகாலை திடீரென ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாகவும் அதிகாலை 3 மணி அளவில் நிலச்சரிவு ஏற்பட்டதால் தூங்கிக் கொண்டிருந்த ஏராளமான பேர் உயிருடன் புதைந்ததாகவும் தெரிகிறது. 
 
கிட்டத்தட்ட ஆறு கிராமங்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாக்கியதாகவும் 3 கிராமங்கள் மண் சரிவால் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி உள்ளதாகவும் இந்த நிலச்சரிவில் 2000க்கும் அதிகமானோர் உயிருடன் மண்ணுக்கு புதைந்ததாகவும் அந்நாட்டின் பேரிடர் மேலாண்மை துறை தெரிவித்துள்ளது. 
 
நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் சுமார் 4000 பேர் வசித்து வந்ததாகவும் கூறப்படும் நிலையில் உயிர் தப்பிய மக்கள் இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை. இந்நிலையில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. 
 
நிலச்சரிவு நடந்த இடத்திற்கு மீட்பு பணிகளுக்கான உபகரணங்களையும் விமானத்தையும் ஆஸ்திரேலியா அனுப்பி இருப்பதாக ஆஸ்திரேலியா பாதுகாப்பு துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran