’மகிழ்ச்சி’ - இந்தியர்களுக்கு துணை நிற்கும் பாக்கிஸ்தானியர்!


Dinesh| Last Modified திங்கள், 29 ஆகஸ்ட் 2016 (19:57 IST)
”ஒலிம்பிகில் இரண்டே பதக்கங்களை வென்றவர்களை இந்தியர்கள் கொண்டாடுவது அவமானமாக இல்லையா?” என்று இங்கிலாந்தை சேர்ந்த பத்திரிக்கையாளர் பியர்ஸ் மார்கன் என்பவர் டுவிட்டரில் கேட்டிருந்தார்.

 


இதை பார்த்து கொந்தளித்த இந்தியர்கள் அந்த பத்திரிக்கையாளரை திட்டித் தீர்த்தார்கள். ஆனாலும் அந்த பத்திரிக்கையாளர் மீண்டும் டுவிட்டரில் ஒரு பதிவை போட்டார். அதில், “இந்தியாவால் சச்சினை போன்ற சிறந்த வீரரை உருவாக்க முடியும் என்றால் தங்கம் வெல்லும் வீரரையும் உருவாக்க முடியும். அதற்கு முதலீடும், கவனமும் தேவை” என்று அறிவுரை கூறினார்.

இதற்கு பதில் அடி கொடுக்கும் விதமாக, மற்றொரு பாகிஸ்தானை சேர்ந்த பத்திரிக்கையாளர் மசாத் அர்ஷாத் என்பவர், ஒரு பதிவை போட்டார். அதில், “தங்கப்பதக்கம் வென்ற அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளால் சச்சினை போன்ற ஒரு வீரரை உருவாக்க முடியுமா?” என்றார்.


இதில் மேலும் படிக்கவும் :