வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 4 டிசம்பர் 2020 (16:02 IST)

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் மரணம் – மக்கள் சோகம்!

பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் மிர் ஜபருல்லாகான் ஜமாலி மாரடப்புக் காரணமாக மரணமடைந்துள்ளார்.

பாகிஸ்தானுக்கு 2002-ம் ஆண்டு நவம்பர் மாதம் 23-ந் தேதி தொடங்கி 2004-ம் ஆண்டு ஜூன் 26-ந் தேதி வரை பிரதமர் பதவி வகித்தவர் மிர் ஜபருல்லாகான் ஜமாலி. இவருக்கு சில நாட்களுக்கு முன்னர் மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் ராவல்பண்டியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று முன்தினம் மாலை மரணம் அடைந்தார். அவரின் மறைவுக்கு பாகிஸ்தான் அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.