திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 8 ஏப்ரல் 2022 (09:32 IST)

ஆட்சி கலைப்பு செல்லாது.. மீண்டும் நம்பிக்கையில்லா தீர்மானம்! – சிக்கலில் இம்ரான்கான்!

பாகிஸ்தானில் இம்ரான்கான் அரசு அறிவித்த ஆட்சி கலைப்பு செல்லாது என பாகிஸ்தான் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

பாகிஸ்தானில் இம்ரான்கான் பிரதமராக ஆட்சி செய்து வரும் நிலையில் சமீப காலமாக பாகிஸ்தானின் பொருளாதார நெருக்கடிகளால் இம்ரான்கான் ஆட்சி ஸ்திரத்தன்மை இழந்துள்ளது. இந்நிலையில் எதிர்கட்சிகள் நாடாளுமன்றத்தில் இம்ரான்கான் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்த நிலையில் அதை சபாநாயகர் நிராகரித்தார். அதை தொடர்ந்து பிரதமர் இம்ரான்கான் ஆட்சியை கலைத்துவிட்டு மறுதேர்தல் நடத்துவதாக அறிவித்தார்.

ஆனால் எதிர்கட்சிகள் இதை எதிர்த்து பாகிஸ்தான் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் இம்ரான்கான் ஆட்சியை கலைத்தது செல்லாது என அறிவித்துள்ளது. இதனால் நாளை மீண்டும் நாடாளுமன்றம் கூட்டப்பட்டு நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்பதாக இம்ரான்கான் அறிவித்துள்ளார்.