வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 12 நவம்பர் 2024 (10:00 IST)

பேஜர் தாக்குதலை உளறிய நேதன்யாகு! பழிவாங்க ஏவுகணைகளை பறக்கவிட்ட ஹெஸ்புல்லா!

Israel attacks iran

லெபனானில் பேஜர் தாக்குதல் நடத்தியது தாங்கள்தான் என இஸ்ரேல் பிரதமர் பேசிய நிலையில் பதிலடியாக ஏவுகணைகளை வீசி தாக்குதல் தொடுத்துள்ளது ஹெஸ்புல்லா.



 

இஸ்ரேல் - ஹமாஸ் இடையே நடந்து வரும் போரில் லெபனானில் இருந்து செயல்பட்டு வரும் ஹெஸ்புல்லா அமைப்பு ஹமாஸ்க்கு ஆதரவாக களமிறங்கி இஸ்ரேலை வடக்கிலிருந்து தாக்கி வருகிறது. இதனால் லெபனான் மீதும், காசா மீதும் ஒரே நேரத்தில் இஸ்ரேல் போரை நடத்தி வருகிறது.

 

இந்நிலையில் கடந்த சில மாதங்கள் முன்னதாக லெபனானின் ஒரே நேரத்தில் பேஜர் சாதனங்கள் வெடித்ததில் பலர் பலியானார்கள். ஹெஸ்புல்லா தங்களது தகவல் தொடர்பை யாரும் ஒட்டுக் கேட்காத வண்ணம் பேஜரை பயன்படுத்தி வந்த நிலையில், இஸ்ரேல் இதை திட்டமிட்டு செய்திருப்பதாக குற்றச்சாட்டு இருந்தது. ஆனால் இதுகுறித்து இஸ்ரேல் விளக்கம் அளிக்காமல் இருந்தது.

 

இந்நிலையில் சமீபத்தில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, லெபனானில் நடந்த பேஜர் வெடிப்பு தாக்குதலை நடத்தியது தாங்கள்தான் என வெளிப்படையாகவே அறிவித்தார். இதனால் ஆத்திரமடைந்துள்ள ஹெஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளது.

 

இஸ்ரேல் மீது தொடர்ந்து 165 ஏவுகணைகளை வீசி ஹெஸ்புல்லா தாக்குதல் நடத்தியுள்ளது. இஸ்ரேலின் ஹைபா பகுதியில் நடந்த இந்த தாக்குதலில் குழந்தைகள் உட்பட 7 பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கல் வெளியாகியுள்ளது. 

 

Edit by Prasanth.K