வெள்ளி, 8 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 25 ஆகஸ்ட் 2024 (10:59 IST)

இஸ்ரேலை திரும்ப தாக்கத் தொடங்கிய ஹிஸ்புல்லா! - இஸ்ரேலில் அவசரநிலை பிரகடனம்!

Israel War

இஸ்ரேலின் வடக்கு பகுதியில் ஹிஸ்புல்லா - இஸ்ரேல் படைகள் இடையே போர் நடந்து வரும் நிலையில், ஹிஸ்புல்லா அமைப்பு பதில் தாக்குதலை நடத்தத் தொடங்கியுள்ளது.

 

 

இஸ்ரேல் - பாலஸ்தீன ஆதரவு ஹமாஸ் அமைப்பு இடையே கடந்த ஓராண்டுக்கும் மேலாக போர் தொடர்ந்து வருகிறது. இதனால் காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களால் இதுவரை 40 ஆயிரம் பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் ஹமாஸ் அமைப்பிற்கு ஆதரவாக லெபனான் எல்லையில் இயங்கும் ஹிஸ்புல்லா அமைப்பும் களமிறங்கி இஸ்ரேலை தாக்கியது. 

 

ஹிஸ்புல்லா அமைப்பிற்கு ஈரான் நாட்டின் ஆதரவும் உள்ளதால் மத்திய தரைக்கடல் நாடுகளிலும் பெரும் பரபரப்பு எழுந்துள்ளது. சமீபத்தில் இஸ்ரேல் ராணுவம் ஹிஸ்புல்லா அமைப்பின் பதுங்கு தள பகுதிகளில் லெபனானுக்குள் புகுந்து தாக்குதலை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.

 

இந்நிலையில் பதிலடி தாக்குதலாக ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேலின் வடக்கு பகுதியில் ராக்கெட் ஏவுகணைகளை வீசி தாக்குதலை நடத்தியுள்ளது. ஹிஸ்புல்லாவின் தாக்குதலை தொடர்ந்து 48 மணி நேர ராணுவ அவசர நிலையை அறிவித்துள்ளது இஸ்ரேல். மேலும் வடக்கு லெபனான் எல்லையில் இஸ்ரேல் தனது படைகளை குவிக்கத் தொடங்கியுள்ளதால் பரபரப்பு எழுந்துள்ளது.

 

Edit by Prasanth.K