நாளை முதல் ஆவின் நிறுவனத்திற்கு பால் வழங்க மாட்டோம்: பால் உற்பத்தியாளர் சங்கம்..!
நாளை முதல் ஆவின் நிறுவனத்திற்கு பால் வழங்க மாட்டோம் என பால் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பால் உற்பத்தியாளர்களில் சங்கங்களின் கோரிக்கை குறித்து முத்தரப்பு பேச்சு வார்த்தை இன்று நடந்த நிலையில் இந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் முத்தரப்பு பேச்சு வார்த்தை தோல்வி அடைந்ததால் திட்டமிட்டபடி நாளை முதல் போராட்டம் நடைபெறும் என பால் உற்பத்தியாளர் நல சங்கம் அறிவித்துள்ளது.
மேலும் நாளை முதல் ஆவின் நிறுவனத்திற்கு பால் வழங்க மாட்டோம் என்று பால் உற்பத்தியாளர் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த போராட்டம் காரணமாக ஆவின் நிறுவனத்திற்கு நாள் ஒன்றுக்கு ஐந்து லட்சம் லிட்டர் வரை பால் கொள்முதலில் பாதிப்பு ஏற்படும் என்று கூறப்படுவதால் நாளை பொது மக்களுக்கு தேவையான அளவு பால் கிடைக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
Edited by Mahendran