வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 31 டிசம்பர் 2019 (11:59 IST)

ஒன்னும் முடியல டா சாமி... ஒரு கிலோ வெங்காயம் ரூ.260!

இந்தியாவை அடுத்து மலேசியாவிலும் வெங்காயத்தின் விலை ஏகத்துக்கும் அதிகரித்துள்ளது. 
 
மலேசியாவில் கடந்த சில தினங்களாக ஒரு கிலோ இந்திய சிவப்பு வெங்காயம் 15 மலேசிய ரிங்கிட், அதாவது இந்திய மதிப்பில் ரூ.260-க்கு விற்பனையாவதாக தெரிகிறது. இந்தியாவில் இருந்து சிவப்பு மற்றும் பெரிய வெங்காயத்தை ஏற்றுமதி செய்ய தடை விதிக்கப்பட்டதே இந்த விலை உயர்வுக்குக் காரணம் என கூறப்படுகிறது. 
 
கடந்த நவம்பர் மாதம் இந்தியாவில் இருந்து 3,131 டன் சிவப்பு வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்ட நிலையில், டிசம்பரில் இது 1,399 டன்னாக குறைந்துவிட்டது என மலேசிய மத்திய விவசாய சந்தை வாரியம் சுட்டிக்காட்டுவதாக ஊடகச் செய்தி ஒன்று தெரிவிக்கிறது.
வெங்காய தட்டுப்பாடு பிப்ரவரி மாதம் வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அந்த வாரியம் தெரிவிக்கப்பட்டுள்ளது.