புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Updated : திங்கள், 30 டிசம்பர் 2019 (09:48 IST)

இந்தியாவில் உள்ள சொந்த ஊருக்கு வந்த அயர்லாந்து பிரதமர்!

அயர்லாந்து நாட்டின் பிரதமர் தனது மூதாதையர்கள் நாடான இந்தியாவுக்கு வருகை புரிந்துள்ளார்.

அயர்லாந்து நாட்டின் பிரதமராக பதவி வகித்து வருபவர் லியோ எரிக் வராட்கர். இவரது தந்தை அசோக் வராட்கர். மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சிந்து துர்க் மாவட்டத்தில் உள்ள வாராட் என்னும் கிராமத்தை சேர்ந்தவர் அசோக் வராட்கர்.

மருத்துவம் படித்த அசோக் வராட்கர் 1960ம் ஆண்டு அயர்லாந்து நாட்டில் குடியேறினார். இவரது மகன் லியோ எரிக் வராட்கர் அயர்லாந்தில் உள்ள டுப்ளினில் மருத்துவம் படித்தவர். தற்போது பிரதமராக இருக்கும் எரிக் தனது முன்னோர்களின் சொந்த ஊரான வாரட்க்கு வருகை தந்துள்ளார்.

இந்தியாவிலிருந்து அயர்லாந்து சென்று பிரதமர் ஆகியிருந்தாலும் தனது சொந்த ஊருக்கு வருவது சிறப்பான தருணமாக இருப்பதாக எரிக் தெரிவித்துள்ளார்.