செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sivalingam
Last Modified: வெள்ளி, 9 ஜூன் 2017 (23:03 IST)

3 லட்சம் ஆண்டுக்கு முந்தைய மனிதனின் எலும்பு: தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டுபிடிப்பு

உலகில் இதுவரை ஒரு லட்சம் ஆண்டுக்கு முந்தைய மனிதனின் எலும்புக்கூடு மட்டுமே கண்டு எடுக்கப்பட்ட நிலையில் சமீபத்தில் மொராக்கோ நாட்டின் தொல்பொருள் ஆய்வாளர்கள் மூன்று லட்சம் ஆண்டிற்கு முந்தைய மனிதனின் எலும்பு ஒன்றை கண்டெடுத்துள்ளனர்.



 


மொரக்கோ நாட்டின் மர்ராகேஷ் என்ற இடத்தில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் பழமையான சுரங்கம் ஒன்றில் ஆய்வு நடத்தி கொண்டிருந்தபோது ஒரு மனிதனின் எலும்பை கண்டுபிடித்தனர். அந்த எலும்பை ஆய்வு செய்தபோது அது 3 லட்சம் ஆண்டுகளுக்கு முந்தையது என்பது தெரிய வந்தது.

இந்த எலும்பை வைத்து 3 லட்சம் ஆண்டுகளுக்கு முன் மனிதனின் உருவம் எப்படி இருந்தது என்பதை கண்டுபிடிக்கும் ஆய்வில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.