ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Updated : புதன், 8 மார்ச் 2023 (11:56 IST)

அமெரிக்கா, தென்கொரியா மீது தாக்குதல் நடத்துவோம்: வடகொரிய அதிபரின் சகோதரி மிரட்டல்..!

kim yo jung
அமெரிக்கா, தென்கொரியா மீது தாக்குதல் நடத்துவோம்: வடகொரிய அதிபரின் சகோதரி மிரட்டல்..!
அமெரிக்கா மற்றும் தென் கொரியா மீது தாக்குதல் நடத்துவோம் என வடகொரியா அதிபரின் சகோதரி கிம் யோ ஜாங் என்பவர் மிரட்டல் விடுத்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெறும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
உலகின் மிக மர்மமான நாடாக இருக்கும் வடகொரியா அணு ஆயுதத்தை வைத்துக்கொண்டு உலகின் வல்லரசு நாடுகளை மிரட்டி கொண்டிருக்கிறது. அந்நாட்டில் என்ன நடக்கிறது என்பதே வெளியுலகத்துக்கு தெரியாமல் இருக்கும் நிலையில் அமெரிக்கா மற்றும் தென்கொரியாவை அடக்குவதற்காக போர் பயிற்சியை செய்து வருகிறது. 
 
இந்த நிலையில் அமெரிக்கா மற்றும் அதன் கைப்பாவையாக இருக்கும் தென்கொரியாவின் ராணுவ நடவடிக்கைகளை நாங்கள் கண்காணித்து வருகிறோம் என்றும் எந்த நேரத்திலும் அமெரிக்கா மீது தாக்குதல் நடத்த தயாராக இருக்கிறோம் என்றும் வடகொரிய அதிபரின் சகோதரியே கிம் யோ ஜாங் தெரிவித்துள்ளார். 
 
இந்த நிலையில் அமெரிக்கா மற்றும் தென்கொரியா போர் பயிற்சி நடத்தி வருகிறது என்பதும் அவ்வப்போது வடகொரியாவுக்கு மிரட்டல் எடுத்து வருகிறது என்று குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran