வெள்ளி, 8 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 31 அக்டோபர் 2024 (07:08 IST)

ரஷ்யாவுக்கு ஆதரவாக இறங்கிய வடகொரியா சிறப்பு படை! சிக்கலில் உக்ரைன்! - ஜோ பைடன் கவலை!

உக்ரைன் - ரஷ்யா இடையே நடந்து வரும் போரில் ரஷ்யாவுக்கு ஆதரவாக வடகொரிய படைகள் களம் இறங்கி இருப்பது கவலை அளிப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

 

 

ரஷியாவின் அண்டை நாடான உக்ரைன், நேட்டோ அமைப்புடன் இணைய இருந்த நிலையில் ரஷ்யா அதன் மீது போரை தொடுத்தது. தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக நடந்து வரும் இந்த போரால் உக்ரைன், ரஷ்யா இரு தரப்பிலும் ஏராளமான ராணுவ வீரர்கள் பலியாகியுள்ளனர்.

 

ரஷ்யாவில் ஏராளமான ராணுவ வீரர்கள் பலியான நிலையில், கட்டாய ராணுவ சேர்க்கை மூலம் மேலும் பலரை ராணுவத்தில் சேர்த்ததாக கூறப்படுகிறது. ரஷ்யாவின் ராணுவ துருப்புகளின் எண்ணிக்கை குறைந்துள்ள நிலையில், தற்போது வடகொரியா ரஷ்யாவுக்கு அதிசிறப்பு வாய்ந்த 10 ஆயிரம் பேர் கொண்ட படையை வழங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
 

 

அதேசமயம், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தொடர்ந்து உக்ரைனுக்கு ஆயுத உதவி, பொருளுதவி வழங்கி வருகின்றனர். ரஷ்யா தனது ராணுவத்தில் வடகொரிய படைகளை சேர்த்துள்ளது கவலை அளிப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளதுடன், அவர்கள் உக்ரைனுக்குள் அடியெடுத்து வைக்க அனுமதிக்கக் கூடாது என்றும் பேசியுள்ளார். ரஷ்யா - உக்ரைன் இடையேயான இந்த போரில் தற்போது வடகொரியாவின் ஈடுபாடும் அதிகரிப்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.

 

Edit by Prasanth.K