சொந்த நாட்டின் மீதே ஏவுகணை தாக்குதல் நடத்திய வடகொரியா! என்ன ஆச்சு கிம் ஜோங் உன்?
அமெரிக்கா உள்பட உலக நாடுகளை அணுகுண்டு சோதனை மூலம் மிரட்டி வரும் வடகொரியா, மூன்றாம் உலகப்போர் வந்தால் அதற்கு காரணமாக இருக்கும் நாடு என்று கூறப்படுகிறது
இந்த நிலையில் அமெரிக்கா மற்றும் ஐநாவின் எச்சரிக்கையை மீறி அவ்வப்போது அணு ஆயுத சோதனைகளை நடத்தி வரும் வடகொரியா சமீபத்தில் Hwasong-12 என்ற ஏவுகணையின் சோதனையை நடத்தியபோது அந்த ஏவுகணை வடகொரிய நகரமான டோக்சோன் என்ற நகரத்தில் விழுந்து பெரும் சேதத்தை உண்டாக்கியுள்ளதாக தெரிகிறது
தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த தவறு நடந்ததாக கூறப்படினும் அந்த நகரத்தில் வாழ்ந்த 2 லட்சம் மக்களின் நிலை என்ன என்பது குறித்து எவ்வித தகவலும் இன்னும் வெளிவரவில்லை. ஆனால் கூகுள் எர்த் மூலம் பார்த்ததில் கடந்த வாரம் இருந்த பல கட்டிடங்கள் இப்போது இல்லை என தெரியவந்துள்ளது
இதுகுறித்து அமெரிக்க அதிகாரிகள் கூறியபோது வடகொரியாவின் Hwasong-12 என்ற ஏவுகணை திரவ எரிபொருள் கொண்ட ஏவுகணையாக இருந்திருந்தால் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்று கூறியுள்ளது