புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 18 பிப்ரவரி 2019 (21:03 IST)

உலக அமைதிக்கான நோபல் பரிசு! அமெரிக்க அதிபர் டிரம்ப் பெயர் சிபாரிசு...

இரண்டாம், உலகப்போருக்கு பின் மற்றொரு உலகப் போர் வரக் கூடாது என்பதில் உலக நாடுகள் ஒன்று கூடி சிந்தித்து ஐநா அமைப்பை ஏற்படுத்தின. இந்த அமைப்பு  அவ்வப்போது உலக நாடுகளில் எழும் பிரச்சனைகளை அமைதி பேச்சின் மூலம் தீர்வு காண வழிவகை செய்யும் .
இது ஒருபுறம் இருக்க ஆல்பிரட் நோபல் பெயரில் உலகில் அமைதிக்காக உழைத்தவர்களுக்காக ஒவ்வொரு ஆண்டும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. 
 
அமெரிக்காவை சேர்ந்த மார்டின் லூதர் கிங் ஜூனியர் அமைதிக்கான நோபல் பரிசை பெற்றிருக்கிறார். தற்போது அணு ஆயுத சோதனைகள் மூலம் ஜப்பான் உட்பட பல உலக நாடுகளை பயமுறுத்திய வட கொரியா நாட்டின் அதிபர் கிம் ஜங்கும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்-ம்  சென்ற ஆண்டு சிங்கப்பூரில் சந்தித்து பேசினர். அதன்பின்னர் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் தணிந்தது. 
 
இந்நிலையில் கொரியாவுடனான அமைதி பேச்சு வார்த்தையை நடத்தியதற்காக ஜனாதிபதி டிரம்ப் பெயரை , ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபே  அமைதிக்கான  நோபல் பரிசுக்கு சிபாரிசு செய்திருக்கிறார். அத்துடன் அவர் பரிந்துரைத்தற்கான கடித்ததின் நகலை வெள்ளை மாளிகைக்கு அனுப்பி வைத்துள்ளார்.

இத்தகவலை டிரம்ப் செய்தியாளர்களுக்கு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.