1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : திங்கள், 3 அக்டோபர் 2022 (21:10 IST)

நாட்டின் அமைதியைக் குழைக்க யாருக்கும் அனுமதியில்லை-ஈரான் அதிபர்

iran
ஈரான் நாட்டில் பெண்களுக்கு ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதற்கு எதிராக ஈரான் பொதுமக்கள்  போராட்டத்தில் குதித்துள்ள நிலையில், இதுகுறித்து  ஈரான் அதிபர் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்துள்ளார்.

ஈரான்  நாட்டில் வசிக்கும் பெண்கள் 7 வயதிற்கு மேல் ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சமீபத்தில்,  22 வயது பெண் மாசா அமினி ஹிஜாப் அணியாததற்காக கைது செய்யப்பட்டார்.

அவர் மீது போலீஸார் கடுமையாகத் தாக்கினர். இதில் அவர் கோமா நிலைக்குச் சென்ற   நிலையில் கடந்த 17 ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

 இதையடுத்து,  ஈரானில் அரசுக்கு எதிராககப்  பொதுமக்கள் போராட்டத்தில் குதித்தனர்.
நேற்று, குர்கிஸ்தான்  உள்ளிட்ட 30 நகரங்களில் பெண்களின் போராட்டம் நடந்தது. இப்போராட்டத்தில் போலீஸாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையேயான மோதலில் 31 பேருக்கு மேல் பலியாகியுள்ளதாக தகவல் வெளியானது.

பெண்களுக்கு ஆதரவாக ஆண்களும் போராட்டத்தில் குதித்துள்ள நிலையில்,  ஹிஜாப்பை எரித்தும் தலைமுடியை வெட்டியும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். 

இந்த நிலையில் சமீபத்தில்,  ஈரான் தலைவர் ருஹோல்லா கொமேனியின் சிலைக்கு   தீ வைக்ககப்பட்டது. இதற்கு அங்குள்ள மதத்தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

இந்த நிலையில்,  ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி ஒரு தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்தார். அதில், மாஷா அமினியின் மரணம் வருத்தம் அளிக்கிறது. இதற்காக நடக்கும் வன்முறை ஏற்புடையதல்ல.  கலவரத்தின் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.  ஈரான் நாட்டின் அமைதியைக் குழைக்க யாருக்கும் அனுமதியில்லை என்று கூறினார்.