1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 25 செப்டம்பர் 2022 (14:32 IST)

மகனின் குழந்தையை வயிற்றில் சுமக்கும் தாய்! – அமெரிக்காவில் விநோதம்!

Pregnancy
அமெரிக்காவில் வாடகை தாய் முறையில் சொந்த மகனின் கருவையே தாய் சுமக்கும் சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் குழந்தை பேரு இன்மை திருமண தம்பதிகள் பலருக்கு பிரச்சினையாக இருந்து வருகிறது. இதனால் வாடகைத்தாய் முறையில் குழந்தை பெறுதல் உள்ளிட்டவற்றில் தம்பதிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.

அமெரிக்காவில் தனது மகனுக்கே தாய் ஒருவர் வாடகைத்தாயாக மாறியுள்ள சம்பவம் நடந்துள்ளது. அமெரிக்காவை சேர்ந்த 56 வயதான பெண்மணி நான்சி ஹாக். இவருக்கு 32 வயதில் ஜெஃப் என்ற மகன் உள்ளார். சமீபத்தில் இவரது மகனுக்கு கேம்ப்ரியா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு ஏற்கனவே இரண்டு முறை இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன.


சமீபத்தில் கேம்ப்ரியாவிற்கு ஒரு அறுவை சிகிச்சை நடந்ததால் அவர் குழந்தை பெற முடியாத நிலை ஏற்பட்டதாக தெரிகிறது. தனது மகன் குழந்தை ஆசையில் வேதனைப்படுவதை காண முடியாத நான்சி ஹாக் தானே தனது மகனுக்கு வாடகை தாயாக இருக்க முடிவு செய்துள்ளார்.

அதன்படி கேம்ப்ரியாவின் கருமுட்டை மற்றும் ஜெஃப்பின் உயிரணுவை கொண்டு கர்ப்பமாகியுள்ளார் நான்சி ஹாக். மகனுக்காக சொந்த தாயே வாடகைத்தாயாக மாறிய இந்த சம்பவம் வைரலாகியுள்ளது.