20 மாணவிகளுக்கு கொரோனா: தஞ்சை பள்ளிக்கு விடுமுறை அறிவிப்பு!
20 மாணவிகளுக்கு கொரோனா: தஞ்சை பள்ளிக்கு விடுமுறை அறிவிப்பு!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது என்பதும் நேற்று கூட 695 பேர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் தமிழகத்தில் மீண்டும் பொது மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் முகக்கவசம் தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் தமிழக அரசின் சுகாதாரத் துறை அறிவுறுத்தி வருகிறது
இந்த நிலையில் தஞ்சை அம்மாபேட்டை அரசு உதவி பெறும் மகளிர் பள்ளி ஒன்றில் 20 மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனையடுத்து அந்த பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
20 மாணவிகள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட தஞ்சை அம்மாபேட்டை அரசு உதவி பெறும் மகளிர் பள்ளிக்கு இரண்டு வாரங்கள் விடுமுறை என்றும் அதன் பின்னர் நிலைமையை பொறுத்து விடுமுறையை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது
மேலும் அந்த பள்ளியில் 20 மாணவிகளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து மற்ற மாணவிகளுக்கும் பரிசோதனை நடத்த சுகாதாரத் துறை திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது