1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 30 ஜனவரி 2022 (10:56 IST)

70 ஆண்டுகளாக காவலர்களிடம் சிக்காமல் இருந்த ஓட்டுனர்: அதிர்ச்சியில் போலீசார்!

70 ஆண்டுகளாக காவலர்களிடம் சிக்காமல் இருந்த ஓட்டுனர்: அதிர்ச்சியில் போலீசார்!
லைசன்ஸ் மட்டும் இன்சூரன்ஸ் எடுக்காமல் 70 ஆண்டுகளாக கார் ஓட்டி வந்த டிரைவர் ஒருவர் பிடிபட்டதை அடுத்து போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர் 
 
கார் ஓட்டுநருக்கு முக்கியமான தேவை லைசென்ஸ் மற்றும் இன்சூரன்ஸ் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த முதியவர் ஒருவர் கடந்த 70 ஆண்டுகளுக்கு மேலாக ஓட்டுநர் உரிமம் எடுக்கவில்லை என்றும் இன்சூரன்ஸ் எடுக்கவில்லை என்றும் தெரிகிறது
 
இந்த நிலையில் சமீபத்தில் அவர் வாகன சோதனையில் சிக்கிய போது இதனை அறிந்து கொண்ட போலீசார் இதுவரை காவலர்களிடம் அவர் 70 ஆண்டுகளாக சிக்காமல் இருந்து உள்ளார் என்ற தகவல் அறிந்து பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்
 
 70 ஆண்டுகளாக அவர் தொடர்ச்சியாகக் எப்படி அவர் ஓட்டுனர் உரிமம் மற்றும் இன்சூரன்ஸ் இல்லாமல் இருந்தும் சிக்காமல் இருந்தார் என்று தெரியவில்லை என போலீசார் அதிர்ச்சியுடன் கூறிவருகின்றனர்