வியாழன், 28 மார்ச் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 3 ஜனவரி 2023 (21:00 IST)

எலும்புகளை வலுவாக்கும் தயிர்.. உடல் எடை சீரமைக்கவும் உதவும்!

curd
பாலில் இருந்து உருவாகும் தயிர் எலும்புகளை வலுவாக்கும் என்றும் உடல் எடையை சீராக வைத்திருக்க உதவும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் 
 
பாலில் இருந்து தயாரிக்கப்படும் தயிரில் கால்சியம் அதிகம் இருப்பதால் அது எலும்புகளை வலுவாக்கும் . தயிரில் உள்ள கால்சியம் எலும்பின் அடர்த்தியை சமப்படுத்துவதோடு பலப்படுத்தவும் செய்யும் 
 
தயிரில் குறைந்த அளவு கொழுப்புகள் இருப்பதால் உடல் எடையை சீராக பராமரிக்க உதவும். குளிர்காலத்தில் தயிர் சாப்பிட்டால் சளி இருமல் வரும் என்று கூறப்பட்டாலும் தயிர் கோடை காலத்திலும் குளிர் காலத்திலும் சாப்பிடலாம்
 
குறிப்பாக குளிர் காலத்தில் சரும பிரச்சனைகள் வரும் போது தயிர் சாப்பிட்டால் இயற்கையாகவே அதில் உள்ள ஈரப்பதம் சருமத்தை உலர்வடைய செய்யாமல் காக்கும் 
 
முகப்பரு பிரச்சனை உள்ளவர்களுக்கு தயிர் ஒரு சிறந்த நிவாரணியாக இருக்கும். மாதுளை அல்லது ஸ்ட்ராபெர்ரி பழத்துடன் தயிர் கலந்து சாப்பிடுவதால் உடல் புத்துணர்ச்சி கிடைக்கும் 
 
குழந்தைகளின் உணவில் கண்டிப்பாக தயிர் பயன்படுத்த வேண்டும். காய்கறிகளுடன் தயிர் சேர்த்து சாலட் தயாரித்து கொடுப்பது சிறப்பானது என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்
 
Edited by Mahendran