துப்பாக்கின்னு சொன்னாலே அலறும் அமெரிக்கா! – குத்துச்சண்டை மைதானத்தில் பரபரப்பு!
அமெரிக்காவின் நியூயார்க்கில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியின்போது துப்பாக்கிசூடு நடந்ததாக மக்கள் அலறி ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் சமீபத்தில் பள்ளியில் நடைபெற்ற துப்பாக்கிசூடு சம்பவம் உலக அளவில் துப்பாக்கி பயன்பாடு குறித்த பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவிலும் துப்பாக்கிக்கு எதிராக மக்கள் குரல் கொடுக்க தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் குத்துச்சண்டை போட்டி ஒன்று நடந்த நிலையில் அதை காண ஏராளமான மக்கள் திரண்டிருந்தனர். அப்போது ஏதோ சத்தம் கேட்க அது துப்பாக்கி சத்தம் என தவறாக கருதிய சிலர் அலறியுள்ளனர்.
இதனால் மொத்த மக்கள் கூட்டமும் அலறியடித்து ஓடியதில் சிலர் மிதிபட்டு படுகாயமடைந்துள்ளனர். ஆனால் அந்த அரங்கில் எந்த துப்பாக்கிசூடும் நடக்கவில்லை என நியூயார்க் நகர போலீஸார் தெரிவித்துள்ளனர்.