வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 28 செப்டம்பர் 2020 (08:29 IST)

10 வருஷமா அதிபர் ட்ரம்ப் வரியே கட்டல..! – பிரபல பத்திரிக்கையின் செய்தியால் பரபரப்பு!

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நவம்பரில் நடைபெற உள்ள நிலையில் கடந்த 10 ஆண்டுகளாக அதிபர் ட்ரம்ப் அரசுக்கு வரி செலுத்தவில்லை என பிரபல பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல அமெரிக்க ஊடகமான நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட செய்தியில் கடந்த 15 ஆண்டுகளில் 10 ஆண்டு காலமாக அதிபர் ட்ரம்ப் நடத்தி வரும் தனியார் நிறுவனங்களுக்கான வரிகள் செலுத்தப்படவில்லை. மேலும் தனது வணிக நிறுவனங்கள் பெரும் இழப்பை சந்தித்துள்ளதாக கூறி ட்ரம்ப் பல நிறுவனங்களுக்கு வரியை குறைத்து கட்டியிருப்பதாகவும் அந்த செய்தியில் தெரிவித்துள்ளது.

ஆனால் அதை ட்ரம்ப் தரப்பில் மறுத்துள்ளனர். அதிபர் ட்ரம்ப்பின் வழக்கறிஞர்கள் அளித்துள்ள விளக்கத்தில் ட்ரம்ப் தனது வரியை சரியாக செலுத்தி வருகிறார். நிறுவனங்களின் வளர்ச்சி, வீழ்ச்சி பொறுத்தே அதன் வரிகள் அமைகின்றன. அதை தவிர்த்து தனிநபர் வருமான ரீதியாக ட்ரம்ப் பல மில்லியன் டாலர்கள் வரியாக செலுத்தியுள்ளதை அந்த பத்திரிக்கை கூறவில்லை என்று கூறியுள்ளனர். அதிபர் தேர்தல் நடக்க உள்ள நிலையில் இந்த செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.