வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 26 செப்டம்பர் 2020 (14:28 IST)

தேர்தலில் தனித்து போட்டி... சிங்கிள் சிங்கமாய் கர்சித்த சீமான்!!

நாம் தமிழர் வரும் சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடும் என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி. 

 
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் இன்னும் ஒரு சில மாதங்களில் நடைபெற இருக்கும் நிலையில் இப்போதே கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகள் தொடங்கிவிட்டன. குறிப்பாக திமுக தனது கூட்டணி பலத்தை அப்படியே மைண்டெய்ன் செய்ய நினைக்கிறது. 
 
அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிக, பாமக மற்றும் பாஜக ஆகிய கட்சிகள் கூட்டணியில் இருந்து விலகி தனி அணி அமைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றே கூறப்படுகிறது. 
 
இந்நிலையில் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான், நான் வீழ்ந்தாலும் தமிழ் வாழ வேண்டும் என நினைத்தவர்கள் தற்போது தமிழ் வீழ்ந்தாலும் தாம் வாழ வேண்டும் என நினைக்கிறார்கள். நாங்கள் எந்த காலத்திலும், அதிமுக, திமுக, காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகளுடன் கூட்டணி வைத்துக்கொள்ள மாட்டோம். 
 
நாம் தமிழர் வரும் சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடும். கொரோனா காரணமாக தேர்தல் பணியில் தாமதம் ஏற்பட்டுவிட்டது. இல்லையென்றால் இந்நாளில் தொகுதிக்கு வேட்பாளர்கள் நியமிக்கப்பட்டிருப்பார்கள் என தெரிவித்துள்ளார்.