புதன், 13 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 27 செப்டம்பர் 2019 (14:08 IST)

இயற்கையை காப்பாற்ற நடவடிக்கை எடுங்கள்! – நியூஸிலாந்தில் பேரணி

பருவநிலை மாற்றங்கள் குறித்து அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென நியூஸிலாந்து மக்கள் வீதிகளில் இறங்கி போராட தொடங்கியுள்ளது உலகளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலக அளவில் பருவநிலை மாற்றம் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் ஐ.நா சபையில் பருவநிலை மாற்றம் குறித்து பேசிய பள்ளி மாணவி கிரேட்டா தன்பெர்க் உலக நாடுகளை பருவநிலை மாற்றங்கள் குறித்து என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் என கேள்வி கேட்டார்.

இதை தொடர்ந்து உலகம் முழுவதும் பருவநிலை மாற்றங்கள் குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நியூஸிலாந்து மக்கள் பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்த வலியுறுத்தி வீதிகளில் மாபெரும் பேரணியை நடத்தியுள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட இந்த பேரணி நியூஸிலாந்து நாடாளுமன்றம் வரை சென்றது. போலீஸ் பாதுகாப்புடன் நடந்த இந்த பேரணியில் குழந்தைகள், பள்ளி மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

நியூஸிலாந்தில் நடந்த மிகப்பெரிய பேரணிகளில் இதுவும் ஒன்றாக பார்க்கப்படுகிறது.