1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 10 ஜனவரி 2020 (10:29 IST)

அவர யாராவது கண்ட்ரோல் பண்ணுங்களேன்! – ட்ரம்புக்கு எதிராக தீர்மானம்!

ஈரான் – அமெரிக்க விவகாரத்தில் ட்ரம்ப் செயல்பாட்டை கட்டுபடுத்துவதற்காக புதிய தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.

அமெரிக்கா ராணுவம் ஈராக் விமானநிலையம் அருகே நடத்திய தாக்குதலில் ஈரான் ராணுவ அதிகாரி கொல்லப்பட்டார். இந்த தாக்குதலை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உத்தரவின் பேரில் செய்ததாக அமெரிக்க ராணுவம் தெரிவித்தது. சுலைமாணி கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈராக் அமெரிக்க ராணிவ தளங்களை ராக்கெட்டுகளை வீசி தாக்கியது ஈரான்.

இதனால் இரு நாடுகளுக்கிடையே போர் ஏற்படும் அபாயம் எழுந்தது. இந்நிலையில் இதுகுறித்து அறிக்கை வெளியிட்ட ட்ரம்ப் ஈரான் மீது தாக்குதல் நடத்து எண்ணம் இல்லை என்று தெரிவித்தார். இதனால் போர் பதட்டம் சற்று தனிந்துள்ளது.

எனினும் பல உலக நாடுகள் ரீதியான சமாச்சாரங்களில் ட்ரம்ப் அமெரிக்க அதிகாரிகள், அமைச்சர்கள் ஆலோசனை இல்லாமல் தன்னிச்சையாக முடிவெடுப்பதாக புகார் எழுந்துள்ளது. சுலைமானி கொல்லப்பட்ட விவகாரத்தில் ட்ரம்ப் நேரடியாக பங்கெடுத்துள்ள நிலையில் ட்ரம்ப் தன்னிச்சையாக உத்தரவுகள் பிறப்பிக்க அதிகாரம் அளிக்காதபடியான புதிய தீர்மானத்தை அமெரிக்க பிரதிநிதிகள் சபை நிறைவேற்றியுள்ளது.

இந்த தீர்மானம் செனட் சபையின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ட்ரம்பை கண்ட்ரோல் செய்யவில்லை என்றால் அவரால் அமெரிக்காவுக்கும், உலக நாடுகளுக்குமே பல அபாயங்கள் ஏற்படலாம் என அரசியல் வல்லுனர்கள் தெரிவித்திருந்த நிலையில் இந்த தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.