செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 17 மார்ச் 2022 (17:19 IST)

புதிய வகை உருமாறிய கொரோனா: மறுபடியும் மொதல்லா இருந்தா?

கடந்த 2020 ஆம் ஆண்டில் சீனாவில் உருவாகிய கொரனோ வைரஸ் உலகமெங்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது தான் கொரனோ வைரஸ் பாதிப்பு கட்டுக்குள் அடங்கி இயல்பு நிலை திரும்பியுள்ளது 
 
இந்த நிலையில் மீண்டும் உருமாறிய கொரனோ வைரஸ் பரவி இருப்பதாகவும், இதன் காரணமாக இரண்டு பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வெளிவந்துள்ள செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
ஒமிக்ரானி பிஏ 1 மற்றும் பிஏ2 ஆகிய இரு திரிபுகள் இணைந்து புதிதாக ஒரு வைரஸ் உருவாகி உள்ளதாக கூறப்படுகிறது. இஸ்ரேல் நாட்டின் விமான நிலையத்தில் இரண்டு பயணிகளிடம் இந்த புதிய உருமாரிய வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது