1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 15 ஏப்ரல் 2022 (15:47 IST)

மாநாடு படத்தின் தொலைக்காட்சி பிரீமியர்?... முன்னணி நிறுவனம் வெளியிட்ட வீடியோ!

மாநாடு படத்தின் தொலைக்காட்சி பிரிமீயர் பற்றிய அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது.

மாநாடு படம் அதன் தயாரிப்பாளர், விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் என அனைத்துத் தரப்பினருக்கும் லாபம் கொடுத்துள்ளது. இதுபோல சிம்புவின் படம் ஒன்று அனைத்துத் தரப்பினருக்கும் லாபம் கொடுத்து ஒரு மாமாங்கம் ஆகிறது. அதே போல இந்த படத்தில் பணியாற்றிய கலைஞர்களுக்கும் லாபமாக அடுத்த படங்களில் சம்பளம் கணிசமாக ஏறியுள்ளது. திரையரங்கு வருவாய் மூலமாக மட்டுமே சுமார் 100 கோடி ரூபாய் வருவாய் ஈட்டிய முதல் சிம்பு படமாக அமைந்துள்ளது.

இதையடுத்து இந்த படத்தின் இந்திய மொழிகளுக்கான ரீமேக் தொகை மிகப்பெரிய விலைக்கு விற்பனை ஆகியுள்ளது. இப்படி பல சாதனைகளைப் படைத்துள்ள மாநாடு திரைப்படம் சீனாவில் வெளியாக உள்ளதாம். இப்படி பல சாதனைகளைப் படைத்துள்ள மாநாடு படத்தின் தொலைக்காட்சி பிரிமீயர் பற்றிய அப்டேட்டை இப்போது விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. மேலும் தொலைக்காட்சியில் விரைவில் என்று அறிவித்துள்ளதால் மே 1 ஆம் தேதி வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.