திங்கள், 18 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 2 நவம்பர் 2016 (14:32 IST)

மாயமான மலேசிய விமானம்: திட்டமிட்டே கடலில் மூழ்கடிக்கப்பட்டது!!

கடந்த 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 239 பேருடன் மாயமான மலேசிய விமானத்தை விமானி திட்டமிட்டே கடலில் மூழ்கடித்திருக்கலாம் என விசாரணை குழு சந்தேகம் எழுப்பியுள்ளது. 


 
 
மலேசிய விமானம் எம்எச் 370, 239 பேருடன் கோலாலம்பூரிலிருந்து சீனத் தலைநகர் பெய்ஜிங்கிற்கு புறப்பட்டது. இந்திய பெருங்கடல் பகுதியில் பறந்த போது கட்டுப்பாட்டை இழந்த அந்த விமானம் திடீரென மாயமானது.
 
அந்த விமானத்தை தேடும் பணியில் மலேசிய, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் ஈடுபட்டன. இதில் எந்த தகவலும் கிடைக்காததால் விமானத்தில் பயணம் செய்த அனைவரும் இறந்துவிட்டதாக மலேசிய அரசு அறிவித்தது. 
 
இதைத்தொடர்ந்து ஆஸ்திரேலியாவின் புலனாய்வு அமைப்பு மாயமான விமானம் குறித்து விசாரணையை தொடங்கியது. இந்நிலையில் டான்சானியா நாட்டுக் கடற்பகுதியில் மாயமான விமானத்தின் உதிரி பாகங்கள் கடந்த ஜூன் மாதம் கண்டெடுக்கப்பட்டன. 
 
இந்த உதிரிபாகங்களை ஆய்வு செய்த ஆஸ்திரேலிய விசாரணைக் குழு விமானம் செங்குத்தான நிலையில் கடலில் செலுத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகம் தெரிவித்துள்ளது. 
 
விமானியால் தான் விமானம் கடலுக்குள் விபத்துக்குள்ளாப்பட்டிருப்பதாகவும் விசாரணை குழு சந்தேகம் எழுப்பியுள்ளது.