புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 18 டிசம்பர் 2019 (11:42 IST)

மாயன் நகரத்தின் மாயை உடையுமா? வெளிச்சத்திற்கு வந்த மர்ம பகுதி!

மாயன் நகரமான உக்ஸ்மலில் உள்ள அரண்மனை ஒன்றில் மறைக்கப்பட்டிருந்த பகுதி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 
 
மெக்ஸிகோவில் பண்டைய மாயன் நகரமான உக்ஸ்மலில் உள்ள ஒர் அரண்மனையின் புதிய பகுதி ஒன்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  இந்த கண்டுபிடிக்கப்பட்ட பகுதி கி.பி 670 ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் இருந்திருக்க கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
82 அடி நீளமுள்ள இந்த பகுதியில், 22 அடி உயர வளைவுகள், சுவர்களில் வடிவமைப்பு, கட்டிட கலை ஆகியவை சுண்ணாம்புக் கல்லை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியை கண்டுபிடித்ததன் மூலம் மாயன் சாம்ராஜ்யத்தின் நாகரிகம், ஆட்சி முறை, பாரம்பரிய பழக்க வழக்கங்கள் பற்றிய மாயை விலகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.