1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 7 செப்டம்பர் 2019 (18:40 IST)

வெள்ளத்தில் அடித்துச் சென்று சாக்கடையில் விழுந்த சிறுமி ..உறையவைக்கும் காட்சி !

மெக்சிகோவில் வெள்ளத்தில் அடித்திச் செல்லப்பட்ட ஒரு சிறுமி, திறந்துகிடந்த சாக்கடைக்குள் விழுந்த காட்சிகள் வெளியாகியுள்ளது.
மெக்சிகோ நாட்டில்,  அலஜாண்டிரா டெர்ராசஸ் (17) என்ற சிறுமி வசித்து வந்தார். இவர் அங்குள்ள பள்ளியில் படித்துவந்தார். அத்துடன் மிகச்சிறப்பாக வாலிபால் விளையாடும்  வீராங்களையும் கூட.
 
இந்நிலையில் மெக்சிகோவில் வரலாறு காணாத மழை பெய்துவருகிறது. அதனால் நாடு முழுதும் வெள்ளக்காடாகக் காட்சியளிக்கின்றது.
 
இந்நிலையில் மக்களை, இந்தப் பேரிடரிலிருந்து பாதுக்காக்கும் முயற்சியை அந்நாட்டு அரசு மேற்கொண்டுள்ளது.
 
இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை அன்று, சிறுமி அலஜாண்டிரா வெள்ளதில் சிக்கிக்கொண்டார். கைநீட்டி மற்றவர்களிடம் உதவி கேட்பதற்குள்ளாகவே, அவரை வெள்ளம் அடித்துக்கொண்டு போனது.  அப்போது வழியில் திறந்து வைக்கப்பட்ட ஒரு சாக்கடைக்குள் அவர் விழுந்தார்.

இதனையடுத்து, வெள்ளிக்கிழமை அன்று அவர் மீட்கப்பட்டார். அலஜாண்டிரா சாக்கடைக்குள் விழும் காட்சிகள் அங்குள்ள கேமராவில் பதிவாயுள்ளது. இதைக் காண்போர் நெஞ்சைக் களங்க வைப்பதாக இந்த காட்சிகள் உள்ளன. இந்த சம்பவத்த்திற்கு அந்த நமர மேயரும் வருத்தம் தெரிவித்துள்ளார.